முதுமைக்கு குட்பை சொல்லும் அழகு மூலிகைகள்

Loading...

முதுமைக்கு குட்பை சொல்லும் அழகு மூலிகைகள்வயதாவதை நினைத்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா? எல்லாருக்குமே ஒரு நேரத்தில் தோன்றுவதுதான். வயதாவதை தடுக்க முடியாது. ஆனால் இளமையாக இருப்பது சாத்தியம்தானே.
இளமையாக இருப்பதற்கு மேக்கப்பை கொண்டு உங்கள் சருமத்தை எத்தனை காலம் மறைக்க முடியும். வெளித்தோற்றம் ஒரு சதவீதம்தான் உதவி செய்யும். இளமையும் அழகும் உள்புறத்திலிருந்து வர வேண்டும்.
உடலிலுள்ள செல் வளர்ச்சி குறைந்து போகும்போது வயதான தோற்றத்தை பெறுவோம். உடலில் உள்ள செல்களைபுதுப்பித்தாலே இளமையாக இருக்கலாம்.
நமது செல் மற்றும் திசுவளர்ச்சியை தூண்டி, உடல் உறுப்புகளை நன்றாக செயல்படவைத்து, புதிய சுத்தமான ரத்தம் உடலில் பாய்ந்தாலே என்றும் 16 ஆக வாழலாம். அப்படிப்பட்ட இளமையை நமக்கு இயற்கை நிறைய வழங்கி இருக்கிறது. அதில் ஒன்றுதான் ஆயுர்வேதம்.

ஷிலாஜித் :

ஷிலாஜித் என்பது ஆயுர்வேத மருந்துகளில் ஒன்று. இது நோயெதிர்ப்பு செல்களை நன்றாக செயல்படவைக்கும். இளமையை தக்க வைக்க நிறைய குணங்கள் இந்த மருந்தில் உள்ளது. இது ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும். கேப்ஸ்யூல் வடிவிலும் கிடைக்கின்றது.

சியாவன் பிராஷ் :

சியாவன் பிராஷ் என்கின்ற ஆயுர்வேத மருந்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது பல்வேறு ஆயுர்வேத மூலிகைகள் கலந்து தயாரிக்கப்படுகிறது. இதனை குளிர்காலத்தில் இரு ஸ்பூன் தினமும் குடிப்பதால், ஜலதோஷம், காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். உடலில் உண்டாகும் கழிவுகளை அப்புறப்படுத்தும்.

தேன் :

தேனின் மகத்துவம் தெரியாமல் யாரும் இருக்க முடியாது. உள்ளும், புறமும் அற்புத பலன்களை அள்ளித் தரும். நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டுள்ளது.
சுருக்கங்களை போக்கும். புற்று நோய் வராமல் தடுக்கும். உடல் பருமனை குறைக்கும். தினமும் தேனை சருமத்தில் போடுவதால் நுண்ணிய சுருக்கங்கள் விட்டுப் போகும்.

ஸ்ட்ரா பெர்ரி :

ஸ்ட்ரா பெர்ரி நிறைய ஆன்டி ஆக்சிடென்ட் கலந்த ஒரு பழம். இதனை வாரம் 3 நாட்களாவது சாப்பிடுங்கள். அதேபோல் முகத்தில் அதனை மசித்து போட்டு வந்தாலும் அழகான இளமையான சருமம் கிடைக்கும்.

ரசாயனா :

ரசாயனா என்பது நிறைய மூலிகைகள் கலந்த ஒரு மருந்து. இது வீட்டில் தயாரிக்க முடியாது. கடைகளில் விற்கப்படும் இது, பொடியாகவோ அல்லது மாத்திரையாகவோ கிடைக்கும். இதனால் பக்க விளைவுகள் ஏதுமில்லை. தினமும் இதனை சாப்பிட்டு வர, அபாரமான சரும அழகு கிடைக்கும். என்றும் இளமையாக இருப்பீர்கள்.

எஸென்ஷியல் எண்ணெய் :

சந்தன எண்ணெய், பாதாம் எண்ணெய், ரோஸ்வுட் எண்ணெய், லாவெண்டர் போன்ற வாசனை எண்ணெய்கள் எலும்புகளுக்கு பலம் அளிக்கின்றது. சருமத்தை புத்துணர்வோடு இருக்கச் செய்கிறது.
தினமும் இவற்றைக் கொண்டு உடலில் மசாஜ் செய்து வரலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் இவற்றை கலந்து குளிக்கலாம். விரைவில் மாற்றம் காண்பீர்கள்.

பாதாம் மற்றும் பால் :

முந்தைய இரவில் பாதாமை ஊற வைத்து, பாலுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனை முகத்தில் போட்டு காய வைத்து கழுவவும். இது சுருக்கங்களை போக்கும். ஈரப்பதத்தை சருமத்திற்கு அளிக்கும்.

நெல்லிகாய் :

நெல்லிக்காய் இளமை தரும் கனி என்று அவ்வையார் காலத்திலிருந்தே நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. மூப்பினை விலக்கும் நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நெல்லிக்காயை நரை முடி தவிர்க்கவும் உபயோகப்படுத்தலாம். அதேபோல், நெல்லிக்காய் சாற்றினை முகத்தில் தடவி வந்தால் சருமம் இளமையாய், மிருதுவாய் ஜொலிக்கும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், ரத்தத்தில் கலக்கும் நச்சுக்கள் வெளியேறிவிடும். அதே போல இறந்த செல்களை வேகமாக அகற்றிவிடும். எலுமிச்சை சாறு முகப்பருவை தடுக்கும்.
எண்ணெய் சருமம் உள்ளவர்கள் எலுமிச்சை சாறினை அப்படியே பயன்படுத்தலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் சிறிது தேன் மற்றும் பாலுடன் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தடவி வந்தால், சுருக்கங்கள் இல்லாத இளமையான சருமம் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply