முதல் முறையாக தலைக்கு டை போடுபவர்களா

Loading...

முதல் முறையாக தலைக்கு டை போடுபவர்களாமுதலில் உங்களுக்கு அந்த டை அலர்ஜி வருதானு டெஸ்ட் செய்து பின்பு போடவும். ஹேர் டையினை சிறிது எடுத்து காது பகுதியில் உள்ள முடியில் தடவி பார்க்கவும் பின்பு சில மணிநேரம் கழித்து தலையினை அலசிவிடவும். 48 மணிநேரம் கழித்து அந்த இடத்தில் ஏதுவும் அலர்ஜி ஏற்படாமல் இருந்தால் அதனை முழுமையாக உங்கள் தலைக்கு டை செய்யலாம்.

அலர்ஜி தன்மையினை அறிய டை போடும் அட்டையிலே எழுதியிருக்கும் அதனை போல் செய்து அலர்ஜி சோதனை செய்த பின்பு பயன்படுத்தவும். உங்கள் உடல் நலனுக்கு ஏற்றுக்கொண்டால் மட்டுமே அதனை பயன்படுத்தவும்.

விளம்பரங்களை பார்த்து டையினை வாங்க கூடாது . ஹேர் டையில் அதிகமாக நச்சுத்தன்மை வாயந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. டையினை தலைக்கு பயன்படுத்தும் பொழுது கைகளுக்கு கிளாவுஸ் போட்டு டை செய்யவும்.

பவுடரை கலக்க பிளாஸ்டிக் கிண்ணம் தான் சிறந்தது. மாதம் இரு முறை மட்டுமே டை செய்யவும். அடிக்கடி டை செய்தால் தலை முடி நாசமாகிவிடும்.டை போடும் முறை :

தலைமுடி சுத்தமாக கழுவிய பின்பு தான் டை செய்ய வேண்டும்.
டை செய்த உடனே குளிக்க கூடாது 20 -30 நிமிடம் தலையினை காயவிடவும். அதிக நேரம் அப்படியேவும் இருக்க கூடாது. பிறகு தான் நல்ல தரமான ஷாப்பு போட்டு குளிக்கவும். புருவ முடிகளுக்கு, மற்றும் ஆண்கள் தாடி, மிஸைக்கு டை போடுவதை தவிர்த்து விடவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply