முட்டைகோஸ் சாப்பிடுங்கள் அல்சர் நோய்க்கு

Loading...

முட்டைகோஸ் சாப்பிடுங்கள் அல்சர் நோய்க்குமுட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன.

வயிற்று புண் உள்ளவர்கள் இந்த முட்டை கோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம் நான்கு முறை குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும்.100 கிராம் முட்டைகோஸில் உள்ள சத்துக்கள்

கார்போஹைட்ரேட் – 5.8 கிராம்

சர்கரை – 3.2 கிராம்

கொழுப்பு – 0.1 கிராம்

புரதம் – 1.28 கிராம்

வைட்டமின் பி – 1 – 0.061 கிராம்

வைட்டமின் பி – 2 0.040 மி.கிராம்

வைட்டமின் பி, வைட்டமின் பி6, வைட்டமின் பி9, வைட்டமின் சி, வைட்டமின் கே,

கால்சியம் – 40 மி,கி

இரும்பு சத்து – 0.47 மிகி

மக்னீசியம் – 12 மிகி

மாங்கனிஸ் – 0.16 மி.கிமருத்துவ பயன்கள்

புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் அல்சரை குணப்படுத்தும் குளுட்டமைல் உள்ளதால், அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம்.

இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும்.

முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது.

எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

முட்டைகோஸில் உள்ள அதிகமான நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை சீராக இயக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்கும்.

முட்டைகோஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

முட்டைகோஸில் உள்ள லாக்டிக் அமிலம், தசைகளில் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சிறந்த நிவாரணம் தரும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply