மீனின் செதில்களை போன்று தோல் உரிகிறதா

Loading...

மீனின் செதில்களை போன்று தோல் உரிகிறதாசொரியாசிஸ் என்பது தோல் அழற்சி நிலையாகும். இதை தடிப்பு தோல் அழற்சி என்றும் கூறுவார்கள்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுடைய தோல் மீனின் செதில் போல் இருப்பதால் இதை மீன் செதில் படை என்றும் அழைப்பார்கள்.சொரியாசிஸின் வகைகள்

சொரியாசிஸ் வல்கெரிஸ்(Psoriasis vulgaris): இது பொதுவாக அதிகளவில் காணப்படும் வகையாகும் . சிவந்த தட்டை வடிவமாக தோன்றி பின்னர் வெள்ளை நிற செதில் போன்ற தோலால் மூடப்படுகிறது. இந்த பகுதிகள் பிளேக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

நேர்மாறான தடிப்புத் தோல் அழற்சி(inverse psoriasis): இது பொதுவாக இனப்பெருக்க உறுப்புகளின் கீழே , மார்புகளின் கீழ் இடங்களில் ஏற்படும்.

உராய்வு மற்றும் வியர்வையின் காரணத்தினால் இதன் தாக்கம் அதிகரிக்கும். மேலும் பூஞ்சைத் நோய்த் தொற்றுகளினால்(Fungus) பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இதன் மூலம் அதிகரிக்கிறது.

கை, கால் நகங்களில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கு ‘நெயில் சொரியாசிஸ்(Nail) என்றும் எலும்பு, மூட்டு எலும்பு பகுதியில் ஏற்படக் கூடிய பாதிப்புக்கு ‘சொரியாடிக் ஆர்த்தோபதி’ என்றும் உள்ளங்கை, உள்ளங்கால் பகுதிகளில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கு பாமோ ப்ளான்டர் (Palmo-plantor) என்றும் பெயர்.

உடல் பாகங்களில் கொப்புளங்களை போன்று தோன்றும் சொரியாசிஸ் பாதிப்புக்கு ‘பஸ்டுலர் சொரியாசிஸ்’(pustular) என்று பெயர்.

பஸ்டுலர் சொரியாசிஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் உயிரிழக்கும் அபாயமும் உண்டு

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply