மினி பார்லி இட்லி சாம்பார்

Loading...

மினி பார்லி இட்லி -  சாம்பார்
தேவையானவை:
இட்லி புழுங்கல் அரிசி – ஒரு கப், பார்லி, முழு உளுந்து – தலா அரை கப், வெந்தயம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

சாம்பார் செய்ய:
துவரம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப், புளி – நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா ஒரு சிட்டிகை, சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், தனியா, கடலைப்பருப்பு, எள் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, வெந்தயம் – அரை டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய் – சிறிதளவு, உப்பு தேவையான அளவு.

செய்முறை: z
அரிசி, உளுந்து, வெந்தயம், பார்லி எல்லாவற்றையும் நன்றாக அலசி, வெதுவெதுப்பான நீரில் 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, கிரைண்டரில் அனைத்தையும் போட்டு உப்பு சேர்த்து அரைத்து, 4 மணி நேரம் புளிக்கவிடவும். பிறகு, மாவை மினி இட்லித் தட்டில் (அ) சாதாரண இட்லித் தட்டில் ஊற்றி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

சாம்பார் செய்முறை:
தனியா, கடலைப்பருப்பு, எள், காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை வறுத்துப் பொடிக்கவும். புளியைக் கரைத்து வைத்துக்கொள்ளவும். துவரம்பருப்பு, பாசிப்பருப்பை ஒன்றுசேர்த்து நீர் விட்டு… மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சிறிது உப்பு சேர்த்து குழைய வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து, புளிக்கரைசல் விட்டு… சாம்பார் பொடி, சிறிது உப்பு சேர்த்து, பருப்பைக் கடைந்து சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும்.
சாம்பாரை கிண்ணத்தில் விட்டு, அதில் மினி இட்லிகளைப் போட்டு, ஸ்பூன் வைத்து சாப்பிடக் கொடுக்கவும். பெரிய இட்லியாக செய்திருந்தால், சின்னச் சின்னதாக நறுக்கி, சாம்பாரில் போடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply