மார்பக புற்றுநோயை தடுக்கும் சக்தி கொண்ட முட்டை

Loading...

மார்பக புற்றுநோயை தடுக்கும் சக்தி கொண்ட முட்டைமுட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா என்று நீண்ட காலம் நடந்து வந்த விவாதத்திற்கு, சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவு விடையை தந்துள்ளது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

ஆனால் முட்டையிலிருந்து தான் ஆரோக்கியம் வந்தது என்று சொல்லவே இந்த கட்டுரையை நாங்கள் இங்கு கொடுத்திருக்கிறோம். இந்த கட்டுரையின் மூலம் முட்டையின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். முட்டையிலுள்ள வெள்ளை கரு, மஞ்சள் கரு உட்பட அனைத்து பகுதிகளுமே ஏதாவது ஒரு விதத்தில் உடலுக்கு சக்தியை கொடுக்கும் ஆதாரங்களாக உள்ளன.

அதிலும் நாட்டு முட்டையின் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். தினந்தோறும் ஒரு நாட்டு முட்டையை பச்சையாக குடித்து வந்தால் உடல் உரம் பெறும். பொதுவாக உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துக்கள் பல வடிவங்களில் கிடைத்து வருகின்றன. அவை இயற்கையானதாகவோ அல்லது செயற்கையானதாகவோ என பல்வேறு வடிவங்களில் உள்ளன.

அந்த வகையில் முட்டை ஒரு சிறந்த முழு சுகாதார உணவாக உள்ளது. இந்த முட்டையை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய பலன்களை இங்கே பார்ப்போம்.கண்களின் பராமரிப்புக்கு தேவை முட்டை

லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் ஆகிய கரோட்டினாய்டு பொருட்களை கொண்டிருக்கும் முட்டை கருவிழி செயலிழப்பை தடுப்பதால், உங்களுடைய கண்களுக்கு பாதுகாப்பும், ஆரோக்கியமும் கிடைக்கின்றன. இவற்றின் மூலம் கண்புரைகள் உருவாவதையும் தவிர்க்க முடியும்.புரதங்கள்

உடல் உறுப்புகள் வளரவும், திசுக்களை சீரமைக்கவும் தேவையான புரதங்கள் முட்டையில் பெருமளவு நிரம்பியுள்ளன.கால்சியம் அளிப்பு

நமது உடலின் எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்குத் தேவையான வைட்டமின் டி வேக வைத்த முட்டையில் அதிகளவு உள்ளது. இந்த வைட்டமின் கால்சியத்தை அதிகளவில் கிரகித்துக் கொள்வதால், உடலின் உறுதியும் அதிகரிக்கிறது.தினமும் ஒரு முட்டை

முட்டையிலுள்ள ஒற்றை செறிவூட்டப்படாத மற்றும் பல்படி செறிவூட்டப்படாத கொழுப்புகள், செறிவூட்டப்பட்ட கொழுப்புகளால் வரும் இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் இரத்தம் உறைதல் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதால், தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது என்று ஒரு ஆய்வு முடிவில் சொல்லப்பட்டுள்ளது.கோலைன்

முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலம் ஆகியவற்றின் பிரச்சனைகளைக் குறைக்கிறது. மேலும், மூளையைக் கட்டுப்படுத்தி, அது சிறப்பாக இயங்கவும் உதவுகிறது.நல்ல கொழுப்பு

முட்டையில் நிரம்பியிருக்கும் நல்ல கொழுப்புகள், பிரச்சனைகளை உண்டாக்கும் மோசமான கொழுப்புகளை குறைக்கின்றன. மேலும், ஒன்றுக்கும் அதிகமாக சாப்பிட்டாலும் வேறெந்த விளைவுகளையும் முட்டை ஏற்படுத்துவதில்லை.இயற்கையான வைட்டமின் டி

இயற்கையான முறையில் வைட்டமின் டி நிரம்பியுள்ள உணவுப் பொருளாக முட்டை உள்ளது.மார்பக புற்றுநோய் தடுப்பு

முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாயப்புகளை குறைக்க முடியும். இது மட்டுமல்லாமல், பல்வேறு பிரச்சனைகளையும் துரத்தியடிக்கும் முட்டையை உணவின் ஒரு பகுதியாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.முடி மற்றும் நக பராமரிப்பு

முடி மற்றும் நகத்தின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கான முக்கிய ஊட்டச்சத்துக்களான கந்தகம் மற்றும் வைட்டமின் பி12 நிரம்பியுள்ள உணவாக முட்டை உள்ளது. உங்களுக்கு முடி உதிர்வடையும் பிரச்சனை அதிகமாக இருந்தால், கந்தகம் அதிகளவு உள்ள முட்டையை சாப்பிடுங்கள் பிரச்சனை தீர்ந்துவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply