மாங்காய் இனிப்பு பச்சடி

Loading...

மாங்காய் இனிப்பு பச்சடி
தேவையானவை:
மாங்காய் (சற்றுப் புளிப்பானது) – 1, சர்க்கரை – கால் கப், வெல்லம் பொடித்தது – அரை கப், சுக்குத்தூள் – சிட்டிகை, உப்பு – தேவைக்கு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
மாங்காயை தோல்சீவி துருவிக் கொள்ளுங்கள். துருவிய மாங்காயுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, நன்கு வேகவிடுங்கள். கால் கப் தண்ணீரை வெல்லத்துடன் சேர்த்து கொதிக்கவிட்டு, கரைந்ததும் வடிகட்டுங்கள். மாங்காய் வெந்ததும், அதனுடன் வெல்லத் தண்ணீர், சர்க்கரை, சுக்குத்தூள் சேர்த்து, தீயைக் குறைத்து நன்கு கிளறுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து பச்சடியில் சேருங்கள். இந்தப் பச்சடி இருந்தால் இன்னும் இரண்டு கவளம் சாதம் உள்ளே போகும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply