மல்டி க்ரெய்ன் ஊத்தப்பம்

Loading...

மல்டி க்ரெய்ன் ஊத்தப்பம்
தேவையானவை:
பச்சரிசி, புழுங்கல் அரிசி – தலா ஒரு கப், வெள்ளை உளுந்து, பச்சைப் பயறு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா அரை கப், கொண்டைக்கடலை – கால் கப், வெந்தயம் – அரை டீஸ்பூன், கெட்டித் தயிர் – தேவையான அளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:
அனைத்து தானியங்களையும் நீர், தயிர் சேர்த்து 4 மணிநேரம் ஊறவைத்து, கிரைண்டரில் அரைத்து, கடைசியில் உப்பு சேர்த்து வைக்கவும். 6 மணி நேரத்தில் மாவு பொங்கி இருக்கும். ஊத்தப்பம் ஊற்றும் சமயத்தில், தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, மாவில் போட்டுக் கலக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, எண்ணெய் விட்டு, மாவை கனமான வட்டமாக ஊற்றி இருபுறமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்.

குறிப்பு:
வெங்காய ஊத்தப்பம் வேண்டுமெனில், நறுக்கிய வெங்காயத்தை ஊத்தப்பத்தின் மீது தூவி மிதமான தீயில் பொன்னிறமாக சுடவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply