மலபார் ஸ்பெஷல் அவல் பால்

Loading...

மலபார் ஸ்பெஷல் அவல் பால்
தேவையான பொருட்கள்:
அவல் – 4 டேபிள் ஸ்பூன் பூவம் பழம் – 1 சர்க்கரை – தேவையான அளவு நெய் – 1/2 டீஸ்பூன் பால் – 1 கப் கிஸ்மிஸ் – சிறிது
செய்முறை:
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைத்து, பின் அதனை இறக்கி ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் வாழைப்பழத்தைப் போட்டு, கையால் நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்பு ஃப்ரிட்ஜில் உள்ள பாலை வாழைப்பழக் கலவையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும், அவலை சேர்த்து வறுக்க வேண்டும். அடுத்து ஒரு டம்ளரில் சிறிது பாலை ஊற்றவும், பின் சிறிது அவல் போட்டு, மீண்டும் பால் ஊற்றி, பின் அவல் போட்டு, மற்றொரு முறை பால் ஊற்றி, மீண்டும் அவல் போட்டு, மேலே கிஸ்மிஸ் தூவினால், அவல் பாலை ரெடி!!!

Loading...
Rates : 0
VTST BN