மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா

Loading...

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டாமஞ்சள் பூசிக் குளிக்கும் வழக்கம் தமிழ்நாட்டுப் பெண்களுக்கு இருந்து வருகிறது. மஞ்சள் தோலுக்கு ஆரோக்கியத்தையும் அழகையும் தருகிறது. இந்த காலத்து பெண்களில் பலர் மஞ்சள் பூசிக்குளிப்பதில்லை.
ஆகையால் தான் அவர்களுக்கு மீசையும், தாடியும் வளர்கின்றன என்ற பலர் நினைக்கின்றனர். இது தவறு. மஞ்சள், முடியின் வளர்ச்சியை அடியோடு தடுப்பதில்லை.
ஓரளவுக்குத் தான் தடை செய்கிறது. இதனால் தான் மஞ்சள் பூசிக் குளிக்கும் பெண்களிலும் பலருக்கு முகத்தில் முடி வளர்ந்திருப்பதை காணலாம்.
மஞ்சள் பூசிக் கொண்டால் ஒரு சிறிது தடைபடுகிறது. பிறகு மஞ்சள் பூசுவதை விட்டு விட்டால் மீண்டும் முடி வளர தொடங்கி விடுகிறது.
பெண்களின் உடலின் பெண் சுரப்பிகள் மிகுந்த அளவுக்கு வேலை செய்யாமல் ஆண் சுரப்பிகள் மிகுதியாக இயங்கினால் பெண்களுக்கு ஆணின் தண்மையும் ஆண்களைப் போலவே உடல் முழுவதிலும் முகத்திலும் முடி வளர்கிறது.
இதை உணராமல் மஞ்சள் பூசிக் குளிக்காத பெண்களுக்கு மட்டும் முடி வளர்கிறது என்று எண்ணுவது அறியாமை! மஞ்சள் பூசிக் கொள்ளும் பெண்களுக்கு முடி இருந்தால் அது பளிச்சென்று தெரியாது என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply