மக்காச்சோள குருணை பொங்கல்

Loading...

மக்காச்சோள குருணை பொங்கல்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி குருணை – 1 கப்
பாசிப் பருப்பு – 1 கப்
காய்ந்த சோள ரவை – 1
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய்(நறுக்கியது) – 2
மிளகு, சீரகம்(பொடித்தது) – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய், நெய்(கலந்தது) – 1/2 கப்
உடைத்த முந்திரி – 1 கப்



செய்முறை:

* பருப்பு, அரிசி குருணை, மக்காச்சோள ரவையை (ஸ்டோர்களில் கிடைக்கிறது) தனித் தனியாக உடைத்து வாசனை வரும்வரை) வறுத்துக்கொள்ளவும்.

* பிறகு ஒரு குக்கரில் 4-5 கப் தண்­ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு, சிறிது நெய், உடைத்த கலவையும் சேர்த்து, ஒரு விசில் வரும்வரை வேகவிடவும்.

* வெந்தபின் நெய் மற்றும் எண்ணெயில் கடுகு, சீரகம், மிளகு, பச்சை மிளகாய், பெருங்காயம், உடைத்த முந்திரி, இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டிக் கிளறவும்.

* இது ஒரு புதுமையான பொங்கல். வித்தியாசமான சுவை கொண்டது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply