மகளிர்க்கான அழகுக்குறிப்புகள்

Loading...

மகளிர்க்கான-அழகுக்-குறிப்புகள்பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதே ஒரு தனி கலைதான். தங்களை அழகாக வைத்திருக்கும் பெண்களுக்கு உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது.
அழகாக என்றதும் ஏதோ அழகு நிலையம் சென்று மூடியை வெட்டிக் கொள்வதும், வண்ண சாயங்களை மூசிக் கொள்வதும் இல்லை.
பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளித்தாலே தனி அழகுதான். இப்பொழுதெல்லாம் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது என்பது பழமையாகிவிட்டது.
அப்படி இல்லாமல் வாரத்தில் ஒரு நாளாவது மஞ்சள் தேய்த்து குளிப்பது சருமத்திற்கு நல்லது. அப்படி மஞ்சள் தேய்த்து குளிக்க முடியாதவர்கள் குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள் பொடியைக் கலந்தும் குளிக்கலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் பன்னீர் கலந்து மஞ்சள் பூசிக் குளிப்பது சிறந்தது.
முல்தானி மெட்டி என்று மருந்துக் கடைகளில் கிடைக்கும். தூளாக இருக்கும். அதனை ஒரு சிட்டிகை எடுத்து பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி ஊற விடுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள்.
இதுபோல வாரம் ஒரு முறை செய்து வாருங்கள். உங்கள் முகம் தும்பம் பூ போல மிளிரும் என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டோம். வாடித் தோய்ந்து இருந்த சருமம் புதுப் பொலிவு பெறும்.


பேஷியல் க்ரீம் செய்ய :

மைதா மாவு இரண்டு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு, அதில் சிறிது தயிர், ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் (கஸ்தூரி மஞ்ஜளாக இருந்தால் நல்லது) கலந்து முகத்தில் பேக் போல போடவும்.
கழுத்து, கை, பாதங்களிலும் இதனைப் பயன்படுத்தலாம்.
பேஷ் சிறிது உலர்ந்த பின் லேசாகத் தேய்த்து விடவும். பின்பு நல்ல தண்ணீரால் நன்கு அலம்பவும். முகம் பள பளப்பாகவும் பொலிவுடனும், இருக்கும்.
குடும்பத்தில் எல்லோரும் ஒரே வகை சோப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அவரவர் சருமத்திற்கு ஏற்ற சோப்புகளைப் பயன்படுத்தவும்.
மாதத்தில் ஒரு நாளாவது எண்ணெய் தேய்த்துக் குளித்துப் பாருங்கள். உங்கள் சருமத்தின் செல்கள் எல்லாம் புத்துணர்வு பெறும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply