ப்ராக்கோலி பஜ்ஜி

Loading...

ப்ராக்கோலி பஜ்ஜி
தேவையான பொருட்கள்:
கடலை மாவு – 2 கப் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் பேக்கிங் சோடா – 1 சிட்டிகை உப்பு – தேவையான அளவு ப்ராக்கோலி – 2 கப் தண்ணீர் – 1/2 கப் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ப்ராக்கோலியை பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ப்ராக்கோலி பஜ்ஜி ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply