பேஸ்புக் பக்கத்தைத் திறந்தவுடன் வீடியோ இயங்க ஆரம்பிக்கிறதா படியுங்கள்

Loading...

பேஸ்புக் பக்கத்தைத் திறந்தவுடன் வீடியோ இயங்க ஆரம்பிக்கிறதா படியுங்கள்என் பேஸ்புக் அக்கவுண்ட்டில், யாரேனும் வீடியோவுடன் பதிவு போட்டிருந்தால், அது பக்கத்தைத் திறந்தவுடன் இயங்க ஆரம்பிக்கிறது. இதனை நாம் வேண்டும் என்றால் மட்டும் இயங்க வைத்திட என்ன செய்திட வேண்டும்?

பெர்சனல் கம்ப்யூட்டரில் அதனை எப்படி மேற்கொள்வது என்று பார்க்கலாம்.

பேஸ்புக் திரையில், மேலாகக் காட்டப்படும் சிறிய அம்புக் குறி அல்லது முக்கோணத்தினை கிளிக் செய்து, கிடைப்பதில் செட்டிங்ஸ் (Settings) என்பதில் கிளிக் செய்து செட்டிங்ஸ் மெனு பெறவும்.

திரையின் இடது புறம் உள்ள பிரிவில், கீழாக Videos என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். அதில் கிளிக் செய்திடவும். பின்னர், இரண்டு பிரிவுகள் காட்டப்படும். ஒன்று மாறா நிலையில் உள்ளவை; இன்னொன்று Auto-Play Videos.

பேஸ்புக் திறந்தவுடன், அதில் பதியப்பட்டுள்ள வீடியோக்கள் உடனே இயங்க வேண்டாம் என முடிவெடுத்தால், இதன் அருகில் உள்ள அம்புக் குறியை கிளிக் செய்து, அதில் Off என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

Loading...
Rates : 0
VTST BN