பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ்

Loading...

பேஸ்புக் தளத்தில் பரவும் வைரஸ்உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் தளத்தின், நிறக் கட்டமைப்பினை (Colour Scheme) மாற்றும் முயற்சியில் ஈடுபட்டீர்களா? அவ்வாறு மாற்றியிருந்தால், உடனடியாக அந்த புதிய அமைப்பினை நீக்கிவிடவும். இந்த நிறக் கட்டமைப்பு மாற்றுவதற்கு உதவும் புரோகிராம் தான், பேஸ்புக் தளம் வழியாக வேகமாகப் பரவும் வைரஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சில ஆயிரம் கம்ப்யூட்டர்களைப் பாதித்த இந்த வைரஸ், பன்னாடெங்கும் பரவும் அபாயம் உள்ளது. இதனை உணர்ந்த பேஸ்புக் நிறுவனம், இதனைச் சரி செய்திடும் முயற்சியில் இறங்கி, புரோகிராமினைச் சரி செய்தது. இருந்தாலும், மறுபடியும் இந்த வைரஸ் அதே வழியில் பரவுவதாக அறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் முதலில் ஓர் அறிவிப்பனை வெளியிடுகிறது. உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் தளத்தின் நிறத்தை மாற்றலாம், என இந்த புரோகிராமிற்கான விளம்பர அறிவிப்பாக இது வெளியிடப்படுகிறது. இதன் பால் ஈர்க்கப்பட்டு, இந்த புரோகிராமினை தரவிறக்கம் செய்த பின்னர், நாம் வைரஸ் அடங்கியுள்ள தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறோம். அங்கு, எப்படி நிறம் மாறுதலை மேற்கொள்ளலாம் என்பது வீடியோ காட்சி மூலம் விளக்கப்படுவதாக ஒரு வீடியோவிற்கான லிங்க் கிடைக்கிறது. இதில் கிளிக் செய்தவுடன், பேஸ்புக் வாடிக்கையாளரின் அக்கவுண்ட் பற்றிய தகவல்கள் திருடப்படுகின்றன.

வீடியோ காட்சியைப் பார்க்க வாடிக்கையாளர் விரும்பவில்லை என்றால், உடன் புரோகிராம் ஒன்றைப் பதிவிறக்கம் செய்திடுமாறு கூறுகிறது. உடன் நாம் அந்த புரோகிராமினைப் பதிவிறக்கம் செய்தால், அதனை இயக்கும்போது, வைரஸ் கம்ப்யூட்டரிலிருந்து பரவுகிறது. இந்த புரோகிராமினைப் பதிவிறக்கம் செய்து, ”அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” என்று உள்ளவர்கள், உடனடியாக அந்த புரோகிராமினைக் கப்யூட்டரிலிருந்தே நீக்குவது நல்லது. உடன் பாஸ்வேர்டினை மாற்றுவதும் அறிவுறுத்தப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply