பேஸ்புக்கிற்கு குறிவைத்த ஹைடெக் இணைய திருடர்கள்

Loading...

பேஸ்புக்கிற்கு குறிவைத்த ஹைடெக் இணைய திருடர்கள்உலகெங்கும் சுமார் 100 கோடி மக்கள் பயன்படுத்தும் பேஸ்புக் இன்று
பலபேரின் வாழ்வியல் அங்கம். இதில் அனைத்து தரப்பு மக்களும் தங்கள்
விவரங்களை பதிவதும், பகிர்வதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

வங்கி இணையதளங்களையே குறி வைத்து தாக்குதல் நடத்தி தளத்தை முடக்கி வைக்கும் “திறன்” படைத்த ஹேக்கர்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இணைய திருடர்கள் கடந்த மாதம் பேஸ்புக்கிற்குள் மூக்கை நுழைத்து பார்த்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் அலுவலக பணியாளர்கள் மொபைல் டெவெலபர் இணைய தளம் ஒன்றில் நுழைந்த போது அந்த தளத்தில் இருந்த மால்வேர் என்று அழைக்கப்படும் வில்லங்கமான நிரல் பேஸ்புக் அலுவலக கணினிகளுக்குள் கால் பதித்து இருக்கிறது.

சுதாரித்து கொண்ட பணியாளர்கள் அந்த நிரலை தடுத்து நிறுத்தியதுடன்….அது குறித்து புகார் அளித்து மேலும் ஊடுருவாமல் பார்த்து கொண்டனர். ஆனால்….இந்த அப்பா டக்கர் திருட்டு முயற்சியில் ஈடு பட்டவர்களை இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பேஸ்புக் நிறுவன கணினிகளுக்குள் நுழைய முயற்சி செய்தது இது முதல் முறை அல்ல என்றாலும்… எந்த ஒரு தகவலும் இதுவரை திருடப்படவில்லை என உறுதியாக சொல்கிறது பேஸ்புக் நிர்வாகம்.

இதற்கிடையில் ட்விட்டர் தளத்தில் இருந்து இரண்டரை லட்சம் பேரின் யூசர்நேம், பாஸ்வோர்டு.

மெயில் ஐ.டி.க்கள் மற்றும் பிற தகவல்களை ஏற்கனவே பறிகொடுத்து நிற்கும் ட்வீட்டர் நிர்வாகம்……”சுட்டவர்கள்” சாதாரண ஆட்கள் இல்லை என்று பிரமித்து
நிற்கிறது…..!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply