பேனை போக்கும் கிருமிநாசினி

Loading...

பேனை போக்கும் கிருமிநாசினிதலையை அரித்து எடுக்கும் பேனை போக்குவதில் மல்லிகை செடியின் வேர் அற்புதமான ஒரு கிருமிநாசினியாக செயல்படுகிறது. மல்லிகை செடியின் வேர், வசம்பு இரண்டையும் தனித்தனியே காயவைத்து அரைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டையும் சம அளவு எடுத்து பேஸ்ட்டாகும் அளவுக்கு எலுமிச்சை சாறை சேருங்கள். தலையில் நன்றாக தேய்த்து 10 நிமிடம் கழித்து அலசிவிடுங்கள். தலையை இம்சிக்கும் பேன், பொடுகு, சொரி, சிரங்கு என அத்தனை தொல்லையும் விரைவிலேயே விலகி ஓடி, தலை சூப்பர் சுத்தமாக்கிவிடும்.தலைக்கான ஹென்னா கண்டிஷனர் தாயாரிக்கும் முறை :

மருதாணி பவுடர் – 1 டேபிள் டீஸ்பூன், வெந்தய பவுடர், அரைத்த டீத்தூள், நெல்லிக்காய் தூள் தலா – 1 டீஸ்பூன், தயிர் – 2 டீஸ்பூன்… எல்லாவற்றையும் கலந்து, இத்துடன் 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, வெந்நீர் ஊற்றி பேஸ்ட் ஆக்குங்கள்.

இதைத் தலையில் நன்றாகத் தேய்த்து அலசுங்கள். மருதாணி, தலைமைய குளிர்ச்சியாக்கும், வெந்தயம், முடி வெடிப்பையும் நுனி பிளவையும் போக்கும். நெல்லிக்காய், முடி கொட்டுவதையும் நிறுத்தும். நல்லெண்ணெய், செம்பட்டையான முடியை கறுமையாக்கும். தயிரும் டீத்தூளும் கூந்தலை மிருதுவாக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply