பெண்களே கழுத்து அழகை கவனிங்க

Loading...

பெண்களே கழுத்து அழகை கவனிங்கசங்கு போன்ற கழுத்து என்பார்கள் உவமைக்கு! பராமரிப்பு, உடல் எடை, முதலில் கழுத்தில் தான் பிரதிமபலிக்கும். ஆனால், பல பெண்கள் அந்தக் கழுத்துக்கான முக்கியத்துவத்தை தராமல் விடுவதால் கழுத்தில் கருமை தட்டுவது, மடிப்புகள் விழுவது, முரடு தட்டிப்போவது என சீக்கிரத்திலேயே வயோதிக தோற்றத்தைப் பெற்றுவிடுகிறார்கள்.

பியூட்டி பார்லரில் முகத்துக்கு மட்டும் பேஷியல் செய்யும் போது நாளடைவில் கழுத்துப் பகுதி தொய்ந்து, சுருக்கம் விழுந்து, வயதைக் கூட்டிக் காட்டும். எனவே, முதலில் கழுத்துக்கு பேஷியல் ஸ்ட்ரோக் தந்த பிறகு, முகத்துக்கு பேஷியல் செய்து கொள்ளுங்கள்.

குட்டையான கழுத்து இருப்பவர்கள், கழுத்தை சரியாகப் பராமரிக்காமல் விட்டால், கயிறு கட்டியது போல் மடிப்புகள் தோன்றி, பின் கழுத்தில் கறுப்பு வரிகள் ஏற்படும். இதற்கு, பாதாம் எண்ணெயையும் தேங்காய் எண்ணெயையும் சம அளவு கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த எண்ணெயை சிறிது எடுத்து, லேசாக சுடவைத்து, கழுத்தில் தடவி, தினமும் மேலிருந்து கீழாக விரல்களால் தேய்த்துக் குளிக்க வேண்டும். இப்படிச் செய்யும் போது, கழுத்தின் இறுக்கம் குறைந்து, மடிப்பு மறைந்து விடும். கருமையும் மாறும்.

தினமும் காலையில் எழுந்ததும், கழுத்தை மேலும், கீழும், பக்கவாட்டிலும் திருப்பி எக்ஸர்சைஸ் செய்வதால், தசைகள் தளர்வாகி, தோல் தொய்ந்து விடாமல் பாதுகாக்கப்படும்.

கழுத்தில் அணிந்திருக்கும் மஞ்சள் சரடை மாற்றாமல், நாட்கணக்கில் போட்டியிருந்தால் கழுத்துப் பகுதி முரடு தட்டி, கருமை படர்ந்து விடும். சிலருக்கு நகைகளும் ஒவ்வாமல் போகலாம். இதற்கு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை பவுடர், ஒரு டீஸ்பூன் வெண்ணெய், கால் டீஸ்பூன் பச்சைக் கற்புர பவுடர் மூன்றையும் கலந்து… பின் கழுத்து, முன் கழுத்து, தோள்பட்டை வரை தினமும் தேய்த்துக் குளியுங்கள். கருமை மறைந்து தோலும் மிருதுவாகும்.

சாப்பாட்டில் வெந்தயக்கீரையை அதிகம் சேர்த்துக் கொள்வதோடு, அந்தக் கீரையை அரைத்து கழுத்தில் பூசி வர வெண்சங்கு போல் ஜொலிக்கும் உங்கள் கழுத்து.

குட்டையான கழுத்து இருப்பவர்கள், கழுத்தை ஒட்டி நெக்லஸ், சோக்கர்ஸ் அணிவதை விட, நீளமான செயின் அல்லது மணிகளை அணிவது, கழுத்தை இன்னும் எடுப்பாகக் காட்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply