புளு டூத் ஸ்பீக்கர்கள் வழக்கமான இனிமையான இசையைக் கொடுக்குமா

Loading...

புளு டூத் ஸ்பீக்கர்கள் வழக்கமான இனிமையான இசையைக் கொடுக்குமாபொதுவான சூழ்நிலையில், ஸ்பீக்கர்கள், ஏதேனும் ஒரு சாதனத்துடன் வயரால் இணைக்கப்பட்டு, ஒலியை நமக்குத் தரும். புளுடூத் ஸ்பீக்கர்கள் இந்த வயர் தேவையை நிராகரித்து, ஒலி தரும் சாதனத்துடன் இணைந்து இனிமையான இசையைத் தருகின்றன. மொபைல் போன், லேப்டாப் கம்ப்யூட்டர்கள், கார்களில் இயங்கும் ஆடியோ சாதனங்களுடன் புளு டூத் ஸ்பீக்கர்கள் இணைந்து செயல்பட்டு இசையை வழங்குகின்றன. சிறிய, பெரிய அளவுகளில் புளு டூத் ஸ்பீக்கர்கள் சந்தையில் கிடைக்கின்றன.

ஒலி தரும் சாதனத்தில் புளுடூத் வசதி இருக்க வேண்டும். அதனையும் புளுடூத் ஸ்பீக்கரையும் இணைத்து (paired and connected) இயக்க வேண்டும். சிறிய புளுடூத் ஸ்பீக்கர்களை கோட் பாக்கெட்டில் வைத்து எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். மொபைல் போன்களில் போல, இவற்றில் சார்ஜ் செய்யக் கூடிய பேட்டரிகள் இருக்கும். சார்ஜ் செய்து பயன்படுத்தலாம்.

மொபைல் போன்களுடன் இணைத்து செயல்படுத்துகையில், போனுக்கு அழைப்பு வந்தால், பாடல் இயங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, போன் அழைப்பு செயல்படுத்தப்படும். நாம் போன் அருகே செல்லாமல், ஸ்பீக்கர்கள் வழியாகவே பேசலாம். அதற்கான மைக் இருக்கும்.

சற்றுப் பெரிய ஸ்பீக்கர்களில், சார்ஜ் செய்யக் கூடிய பேட்டரி இருப்பதில்லை. (சில மாடல்கள் இவற்றைத் தருகின்றன) மின்சக்தி வழங்கும் சாக்கெட்களில் பொருத்தியவாறு இயக்கலாம். பேட்டரிகளைப் பொருத்தியும் இயக்கலாம். ஒலியின் அளவு சின்ன புளுடூத் ஸ்பீக்கர்களில் குறைவாகவும், பெரிய ஸ்பீக்கர்களில் அதிகமாகவும் இருக்கும். இணைப்பின் தூரம் 30 அடிக்குள் இருக்கும்.

வை பி இணைப்பில் செயல்படும் ஸ்பீக்கர்களும் உள்ளன. ஆனால், இவற்றைப் பயன்படுத்த வீடு முழுவதும் வை பி இயக்கம் செயல்பாட்டில் இருக்க வேண்டும். இவை நேரடியாக, ஒலி தரும் சாதனத்துடன் இணையாததால், ஒலியின் சிறப்பு தன்மை, புளுடூத் ஸ்பீக்கர்களைக் காட்டிலும் சற்றுக் குறைவாகவே இருக்கும்.

நாம் நினைத்த இடத்தில் அமர்ந்து கொண்டு இசையை ரசிக்க புளுடூத் ஸ்பீக்கர்கள் நமக்கு உதவுகின்றன.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply