புரோகோலி கூட்டு

Loading...

புரோகோலி கூட்டு
தேவையான பொருட்கள்:

புரோகோலி – 1/4 கிலோ
முழு பூண்டு – 1
வெங்காயம் – 1/4 (சிறிய துண்டு)
எண்ணெய் – 2 அல்லது 3 ஸ்பூன்
உப்பு – 1/4 ஸ்பூன்
தண்­ணீர் – 1/4 கப்
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்


செய்முறை:

* புரோகோலியை அதன் தண்டு உட்பட (அரை இன்ச் அளவில்) நறுக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.

* பூண்டு பற்களை வட்ட வடிவில், சற்றுத் தடிமனாக நறுக்கிக் கொள்ளவும்.

* வெங்காயத்தையும் நறுக்கி வைக்கவும்.

* வாணலியில் எண்ணெய்விட்டு அதில் நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை லேசாக வதக்கி, பிறகு நறுக்கிய புரோகோலியையும் அத்துடன் சேர்த்து வதக்கவும்.

* புரோகோலியின் பச்சை நிறம் மாறாத அளவுக்கு மட்டும் வதக்கிய பிறகு உப்பு, தண்ணீ­ர் சேர்த்து மூடி போடாமல் வேகவைக்கவும்.

* வெந்த பிறகு மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply