புடலங்காய் மருத்துவ குணங்கள்

Loading...

புடலங்காய் மருத்துவ குணங்கள்புடலங்காயில் நன்கு முற்றியதை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள காயை பயன்படுத்த வேண்டும்

1. ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக புடலங்காய் இருக்கிறது. காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு

2.தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேகம் பருமன் அடையும்.

3. புடலங்காய் அஜீரண தொல்லையை எளிதில் சீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.

4. குடல் புண்ணை ஆற்றும் சக்தி இதற்கு உண்டு. வயிற்று புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்.

5. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையதாக இருக்கிறது.

6. மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.

7. நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

8.பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும். கருப்பைக் கோளாறையும் குணப்படுத்தும். கண்பார்வையை அதிகரிக்க செய்யும்.

9. இதில் அதிகம் நீர்ச்சத்து இருப்பதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு.

10. வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply