பீட்ரூட் கீர்

Loading...

பீட்ரூட் கீர்
தேவையானவை:
பீட்ரூட் (பெரியது) – 2, காய்ச்சி ஆறவைத்த பால் – 4 கப், ஏலக்காய் – 3, குங்குமப்பூ – ஒரு சிட்டிகை, முந்திரி – 6 (நெய்யில் வறுக்கவும்), சர்க்கரை – 50 கிராம், நெய் – சிறிதளவு.


செய்முறை: பீட்ரூட்டை
தோல் சீவி, நறுக்கி, குக்கரில் வேகவிட்டு எடுத்துக் கொள்ளவும். வெந்த பீட்ரூட், காய்ச்சி ஆறவைத்த பால், சர்க்கரை, ஏலக்காயை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும். மேலே குங்குமப்பூ தூவி, வறுத்த முந்திரி சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து கூலாக பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply