பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் கூந்தல் உதிர்வு

Loading...

பிரசவத்திற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் கூந்தல் உதிர்வுபிரசவம் முடிந்த பின்பு பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பல. ஆனால் அவற்றில் உடல் எடை அதிகரிப்பதும், கூந்தல் உதிர்தலும் தான் முதன்மையானவை. அதிலும் இந்த பிரச்சனைகள் குழந்தை பிறந்து 5 மாதம் வரை அதிகம் இருக்கும்.

பிரசவத்திற்கு பின் சற்று அதிக அளவில் கூந்தலை கவனித்து பராமரித்து வந்தால், கூந்தல் உதிர்தலை குறைக்கலாம். பிரசவத்திற்கு பின் தற்காலிகமாக உதிரும் கூந்தலை, தடுக்க சில வழிமுறைகள் உள்ளன. அவற்றை பார்க்கலாம்..

பிரசவத்திற்கு பின் ஏற்படும் கூந்தல் உதிர்தலை ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவதன் மூலம் குறைக்கலாம். இப்படி ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவதால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, மயிர்கால்கள் வலுவுடன் இருந்து, முடி உதிர்வதைத் தடுக்கும்.

வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, முடி உதிர்வது நிற்கும்.

பிரசவத்திற்கு பின்னர் எந்த ஒரு ஹேர் ஸ்டைல் கருவிகளையோ அல்லது ஹேர் டை போன்றவற்றையோ பயன்படுத்த வேண்டாம். இதனால் கூந்தலுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கப்பட்டு, கூந்தல் இன்னும் உதிரும். பிரசவத்திற்கு பின் கூந்தல் வலுவின்றி இருக்கும்.

எனவே இக்காலத்தில் நெருக்கமான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்த வேண்டாம். மேலும் கூந்தல் ஈரமாக இருந்தால், அப்போது கூந்தலுக்கு சீப்பை பயன்படுத்தவே கூடாது. இல்லாவிட்டால், இது கூந்தல் உதிர்தலை இன்னும் அதிகரித்துவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply