பால் சுண்டைக்காய் பாயசம்

Loading...

பால் சுண்டைக்காய் பாயசம்
தேவையான பொருட்கள்:

சுத்தம் செய்த பால் சுண்டைக்காய் – 1/4 கப்
பாசிப்பருப்பு – 1/2 கப்
திக்கான வெல்லக் கரைசல் – 1 கப்
திக்கான முதல் தேங்காய்ப் பால் – 1 கப்
முந்திரி – 10
திராட்சை – 20
நெய் – 2 டேபிள் ஸ்பூன்


செய்முறை:

* பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து, கழுவி, குழைய வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.

* பால் சுண்டைக்காயை சுத்தம் செய்து, இடித்து கொஞ்சமாக தண்­ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்து, மிக்சியில் இட்டு அரைத்து, வடிகட்டி சாறை எடுத்துக் கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தில் வெல்லக்கரைசலை எடுத்துக் காய்ச்சி இறுகும் நிலையில் சுண்டைக்காய் சாறு, பருப்பு மசியல், சேர்த்துக் கிளறி, இறக்கும் தறுவாயில் தேங்காய்ப் பால் சேர்த்து, நெய்யில் சிவக்க வறுத்து வைத்த முந்திரி திராட்சையைச் சேர்த்துக் கலக்கி சுவைக்கவும்.

* கசப்பு என்பதே இல்லாத ஆச்சரியமான ஆரோக்கிய பாயசம் இது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply