பாம்பே மசால்

Loading...

பாம்பே மசால்
என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
பொடியாக நறுக்கிய தக்காளி – 1/2 கப்
மிகப் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 7
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
கடலை மாவு – 2 டீஸ்பூன்
எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு – தாளிக்கத் தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,
கொத்தமல்லித்தழை – சிறிது
தண்ணீர் – 1 கப்
உப்பு – தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் தக்காளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, ஒரு கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கடலை மாவை கொஞ்சம் தண்ணீர் விட்டு, கட்டியில்லாமல் நீர்க்கக் கரைத்து வைக்கவும். கலவை கொதித்ததும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும். கரைத்து வைத்திருக்கும்

கடலை மாவையும் சேர்க்கவும். அடுப்பை அதிக தீயில் வைத்துக் கிளறிவிடவும். இரண்டே நிமிடத்தில் கெட்டியான மசால் ரெடி. இறக்கும் முன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.


உங்கள் கவனத்துக்கு…

தோசை, பூரிக்குத் தொட்டுக்கொள்ள பிரமாதமான பதார்த்தம். தோசைக்குள் மசாலாவாகவும் வைக்கலாம். கடலை மாவை கொஞ்சம் கெட்டியாகக் கரைக்கலாம். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீரை பிறகு சேர்த்துக் கொள்ளலாம். கிளறிவிடாவிட்டால் மசாலா கெட்டிதட்டி விடும். இதிலேயே கடலை மாவுக்கு பதில் பொட்டுக்கடலை, தேங்காய், சோம்பு, இஞ்சி, பூண்டு போட்டால் குருமா ஆகிவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply