பாம்பே டோஸ்ட்

Loading...

பாம்பே டோஸ்ட்
தேவையான பொருட்கள்:
பிரட் – 6 துண்டுகள் பால் – 1/2 கப் முட்டை – 2 சர்க்கரை – தேவையான அளவு நெய் – 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் முட்டை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், ஒரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் நனைத்து வாணலியில் போட்டு முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் செய்ய வேண்டும். இப்போது சுவையான பாம்பே டோஸ்ட் ரெடி!!!
குறிப்பு:
* இந்த டோஸ்ட் செய்ய நெய்க்கு பதிலாக வெண்ணெயை சேர்த்து செய்தால், மிகவும் சுவையாக இருக்கும். * இந்த டோஸ்ட் செய்வதற்கு கோதுமை பிரட் போன்ற பிரட்டிற்கு பதிலாக பால் பிரட் தான் சிறப்பானதாக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply