பாதங்களில் சுருக்கங்கள் வெடிப்பு போக

Loading...

பாதங்களில் சுருக்கங்கள், வெடிப்பு போகபாதங்கள் அழகாய் இருந்தால் பெண்களின் அழகு இன்னும் கூடுதல். பாதங்கள்தானே யார் பார்க்கிறார்கள் என்று முகம், கை மட்டும் அழகுப்படுத்திக் கொள்பவர்கள் நிறைய உண்டு. ஆனால் பாதங்களில் சுருக்கம் விழுந்து வெடிப்புகளோடு வறண்டு இருந்தால் நம் மீதிருந்த மதிப்பே சுவடு தெரியாமல் போய் விடும். எதிலேயும் மேலோட்டமாக இருக்காதீர்கள். பாதங்களையும் கவனியுங்கள். அழகு மட்டுமில்லாமல் பாதத்தின் மூலம் வரும் தொற்றுக்களையும் தடுக்கலாம்
பாதத்தினை எவ்வாறு பராமரிக்கலாம் என பார்க்கலாம். வாரம் ஒரு முறை சுடு நீரில் மஞ்சள், சமையல் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அந்த நீரில் கால்களை நனையுங்கள். 15 நிமிடங்கள் கழித்து பாதங்களை மசாஜ் செய்யுங்கள். இது பாத நகங்களின் இருக்கும் அழுக்குகளை நீக்க உதவியாக இருக்கும்.

எண்ணெய் :
தினமும் ஆலிவ், பாதாம் அல்லது தேங்காய் எண்ணெயை இரவில் தூங்குவதற்கு முன் பாதங்களில் தடவிவிட்டு செல்லுங்கள். இது பாதத்தில் ஏற்படும் வறட்சியை போக்கும். வறட்சியினால்தான் பாதங்களில் சுருக்கங்கள் ஏற்படும்.

ஷீயா பட்டர் :
ஷீயா பட்டரை பாதங்களில் தேய்த்து வட்ட வடிவில் மசாஜ் செய்யலாம். ஒரு வாரத்தில் உங்கள் பாதங்கள் பஞ்சு போன்று மென்மையாகவும், மெருகேறியும் இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply