பழங்களில் உள்ள மருத்துவங்கள்

Loading...

பழங்களில் உள்ள மருத்துவங்கள்நாம் விரும்பிச் சாப்பிடும் சுவையான பழங்களுக்குள் மருத்துவ குணங்களும் உள்ளன. பழங்களுக்குள் உள்ள மருத்துவ குணங்கள் இதோ,


ஆப்பிள்

இரத்த சோகை, இரத்த ஓட்டச் சுழற்சி, குடற்கிருமிகளை அழிக்க உதவுகிறது.வயிற்றுப்போக்கு, சீதபேதி, சிறுநீரக கோளாறுகள், சிறுநீரகத்தில் கல், ஆகியவற்றிற்கு உதவி புரிகிறது. இதய நோயாளிகளுக்குச் சிறந்த உணவாகிறது. கீல் வாதம், இடுப்புச் சந்து வாதம், துடைவாதம், நரம்பு சம்மந்தப்பட்ட சகல வாதங்களும் படிப்படியாகக் குறைந்து பூரண குணம் ஏற்படும்.


நாவல் பழம்

நீரிழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை நீக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது. நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும். வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.


திராட்சை

ஒரு வயது குழந்தைக்கு மலக்கட்டு, சளி, காய்ச்சல் ஏற்பட்டால், குணமாக திராட்சை பழங்களை பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் கொடுக்க வேண்டும். எலும்புகளை உறுதியாக்கும். சிவப்பு திராட்சை தோல் வியாதியை குணமாக்க உதவுகிறது.


கொய்யாப்பழம்

முதுமைத் தோற்றத்தைப் போக்கி முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தரும். உடல் வளர்ச்சியும், எலும்புகளும் பலம் பெறுகின்றன. வயிறு மற்றும் கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. அல்சரைக் குணப்படுத்திவிடும்.


பப்பாளி

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். நரம்புத் தளர்ச்சி குறையும், பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply