பளபளப்பாக்கும் பழ ஃபேஸ் பேக்

Loading...

பளபளப்பாக்கும் பழ ஃபேஸ் பேக்பழங்கள் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல… அழகுக்கும் தான்! பழவகை ‘பேக்’களை பயன்படுத்தி சருமத்தையும் உடலையும் அழகாக்கும் வித்தையை விரிவாகப் பார்ப்போம்.

* நன்றாக தெளிந்த தர்பூசணி ஜூஸ் ஒரு கிளாஸ் எடுங்கள். அதை ஐஸ்கியுப் டிரேயில் ஊற்றி ப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். முகம், கை, கால் கண்களில் இந்த ஐஸ்கட்டிகளை ஒற்றி எடுங்கள். சொர சொரப்பு நீங்கி சருமம் மிருதுவாவதுடன், நல்ல நிறத்தையும் கொடுக்கும்.

* வேலை, அலைச்சலால் சோர்ந்து போகும் கண்களுக்கு, இந்த ப்ரூட் பேக் ஒரு கண்கட்டு வித்தை. மஸ்லின் துணியை உள்ளங்கை அளவுக்கு வெட்டி அவற்றை இணைத்து, இரண்டு சிறு சிறு பைகளாக தைத்து விடுங்கள்.

பிறகு, அதைத் தண்ணீரில் நனைத்து, வாழைப்பழம், தர்பூசணி, பப்பாளி, உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய் எல்லாவற்றிலும் தலா ஒரு துண்டு வீதம் போட்டு, பையின் வாயைத் தைத்து, ப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். தூங்கப் போகும் போது கண்ணுக்கு மேல் இந்தப் பைகளை ஒரு மணி நேரம் வைத்திருங்கள்.

சோர்வுற்ற கண்களுக்கு நல்ல ரெஸ்ட் கிடைக்கும். வாழைப்பழம், கருவளையத்தைப் போக்கும். தர்பூசணி கருவிழியை பளபளப்பாக்கும். பப்பாளி வறட்சி இல்லாமல் வைத்திருக்கும். உருளைக்கிழங்கு, வெள்ளரி நன்றாக ப்ளீச் செய்து குளிர்ச்சியைக் கொடுக்கும். இமைகளில் முடி உதிர்வதும் நிற்கும்.

* புள்ளி, தழும்பு ஆகியவை காரணமாக முகம் பொலிவு இழக்கலாம். ஆரஞ்சுப் பழம் ஒன்றை தண்ணீர்விடாமல் அரைத்து ஜூஸாக்கினால் கால் கப் வரும். மெல்லிய காட்டன் துணியால் ஜூஸைத் தொட்டுத் தொட்டு முகத்தில் ஒற்றி எடுங்கள்.

முகத்தில் உள்ள கரும்புள்ளி, தழும்புகள் மறைவதுடன், நல்ல கலரையும் பளபளப்பையும் தரும். ஆரஞ்சுப் பழத்தின் தோலை வீணாக்கால், வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரில் வெந்தயத்தூளை சேர்த்து தலையை அலசலாம். இதன் மூலம் பேன், பொடுகு, அரிப்பு இதெல்லாம் மறைந்து கூந்தல் பளபளப்பாகும்.

* கொட்டை எடுத்த இரண்டு பேரீச்சம் பழத்தை அரைத்து, தர்பூசணி ஜூஸ் கலந்து முகத்தில் ‘பேக்’ போடுங்கள். பத்து நிமிடம் கழித்துக் கழுவினால், டல்லான் முகம் பொலிவாக மின்னும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply