பல ஜிபி (GB) அளவில் உள்ள பைல்களை அனுப்ப ஜிமெயிலை பயன்படுத்தும் முறை விளக்கம்

Loading...

பல ஜிபி (GB) அளவில் உள்ள பைல்களை அனுப்ப ஜிமெயிலை பயன்படுத்தும் முறை விளக்கம்முதலாவதாக, கூகுள் தரும் வசதியைப் பார்ப்போம். ஜிமெயிலிலேயே அத்தகைய ஒரு சேவை உள்ளது. ‘Attach files’ என்னும் ஐகானை அடுத்து கூகுள் ட்ரைவ் ஐகான் என ஒன்று உண்டு.

அதனைக் கிளிக் செய்து, 10 ஜிபி வரையில் பைல்களை அனுப்பலாம். பைல் அப்லோட் கிளிக் செய்து, பின்னர் பைலைத் தேர்ந்தெடுத்தால், அது ஜி ட்ரைவ் சர்வருக்கு ஏற்றப்படும்.

பின்னர் அதனை யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் மின் அஞ்சல் முகவரியைத் தர வேண்டும். இவ்வாறு ட்ரைவ் மூலம் அனுப்பப்பட்ட பைல்கள், உங்கள் ஜிமெயில் ட்ரைவில் எப்போதும் இருக்கும்.

பின் ஒரு நாளிலும் இவற்றை மற்றவர்களுக்கு அனுப்பலாம். பைல்களை யார் யார் பெற வேண்டும் என அவர்களின் மின் அஞ்சல் முகவரியினைத் தந்தால், அவர்களுக்கு ஒரு மெயில் அனுப்பப்பட்டு, தகவல் தரப்படும்.


பல ஜிபி (GB) அளவில் உள்ள பைல்களை ஒட்டுமொத்தமாக அனுப்பும் வேறு ஒன்லைன் சேவைகள் வழங்கும் நிறுவனங்கள்

1. அடுத்ததாக, wetransfer.com என்னும் தளத்திற்குச் செல்லவும். இங்கு எந்தவிதமான அக்கவுண்ட்டும் தொடங்க வேண்டியதில்லை. நேராக பைலைஅனுப்பலாம். பெறுபவரின் மின் அஞ்சல் முகவரியினைக் கொடுத்து, அவருக்கான சிறிய அளவிலான செய்தியையும் கொடுத்து, 2 ஜிபி வரையிலான பைலைஅனுப்பலாம்.

2. மிகவும் பாதுகாப்பான முறையில் அனுப்ப உங்களுக்கு உதவுவது Dropsend. பாதுகாப்பான முறையில் சுருக்கப்பட்டு அனுப்பப்படுவதுடன், இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையும் கையாளப்படும். Dropbox மூலம், 2 ஜிபி வரையிலான பைலை அனுப்பலாம். அக்கவுண்ட் ஒன்று திறக்க வேண்டும். இதுவும் மேலே குறிப்பிட்ட பாதுகாப்பான முறைகளைக் கையாள்கிறது.

3. மைக்ரோசாப்ட் அனைவருக்கும் வழங்கும் Onedrive சாப்ட்வேர் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து, மொத்தம் 7 ஜிபி வரை இதில் சேமிக்கலாம். ஒவ்வொரு முறையும் அனுப்பும் பைலின் அளவு 2 ஜிபி தாண்டக் கூடாது.

4. இதே போல் செயல்படும் இன்னொரு சேவை Amazon Cloud Drive. 5 ஜிபி வரையிலான டேட்டாவினை அனுப்பி சேவ் செய்து, குறிப்பிட்ட சிலருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply