பயர்பாக்ஸ் Add Ons தொகுப்புகள் 400 கோடி தரவிறக்கம்

Loading...

பயர்பாக்ஸ் Add – Ons தொகுப்புகள் 400 கோடி தரவிறக்கம்பிரவுசர்களில் கூடுதல் வசதிகள் பெற இணைப்பு புரோகிராம்களான (add-ons) ஆட் ஆன் தொகுப்புகளை அறிமுகப்படுத்தி, பெரிய அளவில் வெற்றி பெற்றது, பயர்பாக்ஸ் பிரவுசர் தான். மொஸில்லா நிறுவனத்தின் இந்த முயற்சி, பின் நாளில் மற்ற பிரவுசர் நிறுவனங்களாலும் பின்பற்றப்பட்டது இதன் வெற்றிக்கு எடுத்துக் காட்டாகும். சென்ற மாதம் இந்த ஆட் ஆன் தொகுப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொஸில்லாவின் பயர்பாக்ஸ் இணைய தளத்தில், 18 ஆயிரம் ஆட் ஆன் தொகுப்புகள் தரவிறக்கம் செய்வதற்குத் தரப்பட்டுள்ளன. இதற்கான லைப்ரேரியில், 3 லட்சத்து 69 ஆயிரம் பிரவுசர் தீம்கள் கிடைக்கிறன. இதுவரை ஆட் ஆன் தொகுப்பினை வழங்கிய அப்ளிகேஷன் தயாரிப்பாளர்களுக்கு, 2009 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை, 6 லட்சத்து 34 ஆயிரம் டாலர் மதிப்பூதியமாக வழங்கப்பட்டுள்ளது. 400 கோடி பேர்களால், ஆட் ஆன் தொகுப்புகள் தரவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இன்னும் இந்த முயற்சி தொடர்வதாகவும், இதற்கென பாடுபட்ட டெவலப்பர்களுக்கு நன்றியினைத் தெரிவிப்பதாகவும், மொஸில்லா நிறுவனத்தின் இணைய தளத்தில் தரப்பட்டுள்ளது.

தெரிந்து கொள்ளுங்கள் ப்ளோட் வேர் என நாம் அழைப்பவை, கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களால், தாங்கள் வடிவமைக்கும் கம்ப்யூட்டர்களில் பதிந்து அனுப்பப்படும் புரோகிராம்களாகும். கம்ப்யூட்டர் மட்டுமின்றி, இப்போது, மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள், குரோம் புக், ஐபேட் போன்ற சாதனங்களிலும், நாம் கேட்காத, விரும்பாத பல புரோகிராம்கள் பதியப்பட்டு தரப்படுகின்றன. இவற்றை நாம் கம்ப்யூட்டரை அல்லது மேலே குறிப்பிட்டுள்ள சாதனங்களைப் பெற்றவுடன், இவற்றை நீக்கிவிடலாம். இதனால், தேவையின்றி நம் ராம் மெமரி இடம் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply