பன்னீர் பிரட் பால்ஸ்

Loading...

பன்னீர் பிரட் பால்ஸ்
தேவையான பொருட்கள்:
பன்னீர் – 1 கப் பிரட் – 3 துண்டுகள் உருளைக்கிழங்கு – 1/2 வெங்காயம் – 1 கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன் ரவை – 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பன்னீரை துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை 5 நிமிடம் பிசைய வேண்டும். பிறகு உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து பன்னீருடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பிரட் துண்டுகளின் முனைகளை நீக்கிவிட்டு, அதனை நீரில் ஒருமுறை நனைத்து, பன்னீருடன் சேர்த்து, எண்ணெய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு மென்மையாகும் வரை பிசைந்து உருண்டைகளாக பிடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பன்னீர் பிரட் பால்ஸ் ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply