பட்டன் தட்டை

Loading...

பட்டன் தட்டை
தேவையான பொருட்கள்:

புழுங்கலரிசி – 2 கப்
பொட்டுக்கடலை மாவு – 1/2 கப் (பொட்டுக்கடலை நமுத்திருந்தால், லேசாக வறுத்து அரைக்கவேண்டும்)
பாசிப்பருப்பு மாவு – 1 டேபிள் ஸ்பூன் (வறுத்து அரைத்தது)
பச்சை மிளகாய் – 8
பெருங்காயம் – சிறிது
நன்கு புளித்த தயிர் – 1/4 கப் (அ) எலுமிச்சம் பழச்சாறு – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – 1 டீ ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவைக்கு
உப்பு – தேவைக்கு
தேங்காய் துருவல் – 1/2 கப்


செய்முறை:

* புழுங்கலரிசியை நன்கு கழுவி, ஒரு மணி நேரம் ஊறவையுங்கள்.

* பின்னர் அதனுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், பெருங்காயம், தயிர், உப்பு சேர்த்து, நைஸாக (கெட்டியாக) அரைத்துக்கொள்ளுங்கள்.

* அதில் பொட்டுக்கடலை மாவு, பாசிப்பருப்பு மாவு சேர்த்து, நன்கு கெட்டியாகப் பிசையுங்கள்.

* அந்த மாவிலிருந்து சுண்டைக்காயளவு உருண்டைகள் எடுத்து, சிறு சிறு தட்டைகளாகத் தட்டிக்கொள்ளுங்கள்.

* மிதமான தீயில் எண்ணெயைக் காயவைத்து, தட்டைகளைப் பொரித்தெடுங்கள்.

* கொறிக்க வித்தியாசமான, சத்தான ஸ்நாக்ஸ்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply