நீச்சல் குளத்தில் குளிப்பதால் ஏற்படும் சரும பாதிப்புகள்

Loading...

நீச்சல் குளத்தில் குளிப்பதால் ஏற்படும் சரும பாதிப்புகள்நீச்சல் குளத்தில் நீச்சலை மேற்கொண்டால், அது சருமத்தின் நிறத்தை மாற்றிவிடும். நீச்சலி ஈடுபட்ட பின்னர் ஒருசில செயல்களைப் பின்பற்றினால் சருமத்தின் நிறத்தைப் பாதுகாக்கலாம். இல்லாவிட்டால், சருமத்தில் அரிப்புகள் ஏற்பட்டு, சிவப்பு நிறத்தில் அலர்ஜி போன்று ஆகிவிடும்.

பொதுவாக நீச்சல் குளத்தில் குளித்து முடித்த பின்னர், சருமமானது உடலில் உள்ள நீரை உறிஞ்சிவிடும். ஆகவே நல்ல தரமான எண்ணெய் பசை அதிகம் உள்ள மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும். நீச்சல் குளத்தில் குளித்து முடித்த பின்னர் தக்காளியைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், அதில் உள்ள சிட்ரிக் ஆசிட்டானது சருமத்தில் கருமை ஏற்படுவதைத் தடுக்கும்.

நீச்சல் குளத்தில் உள்ள நீரில் குளோரின் இருப்பதால், அவை சருமத்தை வறட்சி அடையச் செய்யும். எனவே நீர்ச்சத்து குறையாமல் இருக்க தண்ணீர் மற்றும் ஜூஸை அதிகம் குடிக்க வேண்டும்.

நீச்சல் முடித்து வந்த பின்னர், வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் சேர்த்து கலந்து சருமத்திற்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள கருமை, வறட்சியடைவதை போக்கும். நீச்சலை மேற்கொள்ளும் முன்பும் சரி, பின்பும் சரி சன் ஸ்க்ரீன் லோசனை பயன்படுத்தாமல் வெயிலில் செல்ல வேண்டாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply