நீங்கள் மன அழுத்தத்தில் தள்ளப்படிருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் இங்கே

Loading...

நீங்கள் மன அழுத்தத்தில் தள்ளப்படிருக்கிறீர்கள் என்பதற்கான அறிகுறிகள் இங்கேஇன்றைய கால கட்டங்களில் அழுத்தம் என்பது சொல்ல முடியாத அளவிற்கு குழந்தைகளிடமிருந்து பெரியவர்கள் வரை எல்லாரிடமும் இருக்கிறது. ஏதேனும் ஒரு வகையில் எல்லாரும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. செய்யப்படும் வேலைகளிலும் சுற்றுபுற சூழலிலும் அழுத்தம் என்பது தேவைப்படுவதே.

அப்போதுதான் நம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும்.

ஆனால் தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டுக் கொண்டிருந்தால், அல்லது அதிக அழுத்ததுடன் வேலை செய்து கொண்டிருந்தால், இறுதியில் மனஅழுத்தம் ஏற்படுகிறது. மன அழுத்தத்தின்
அறிகுறிகள் :
உணர்ச்சிவயப்படுதல் : தொட்டதெற்கெல்லாம் வேகமாய் உணர்ச்சிவசப்படுகிறீர்களா? திடீரெனெ கோபம் அழுகை, எல்லாரிடமும் எரிச்சல், காரணம் தெரியாமல் சோகமாய் இருப்பது, தனிமையில் இருப்பது போல் உணர்வது இவை எல்லாம் மன அழுத்தத்தின் வெளிப்பாடு.


பழக்க வழக்கங்கள் :
அளவுக்கு அதிகமாய் சாப்பிடுவது அல்லது மிகக் குறைவாக சாப்பிடுவது, தங்களது பொறுப்புக்களை உதாசீனப்படுத்துவது, அதிக நேரம் தூங்குவது அல்லது தூகமே இல்லாமல் தவிப்பது, மது மற்றும் புகைப்ப்டிப்பதனால் தங்கள் பிரச்சனைகள் தீரும் என அதற்கு அடிமையாவது இவை எல்லாம் மன அழுத்ததின் அறிகுறிகள்.


அறிவு சார்ந்த குணங்கள் :
தெளிவான முடிவு எடுக்க முடியாமல் தவித்தல், குழப்பத்துடனே வலம் வருதல், பொது நிலையில் பதட்டப்படுதல், ஞாபக மறதியுடன் இருப்பது. ஆகிவயவை மன அழுத்தம் இருக்கும்போது ஏற்படும்.


உடல் சார்ந்த பிரச்சனைகள் :
அடிக்கடி தலைவலி, வயிற்றுப் போக்கு, நெஞ்சு வலி, உடலுறவில் ஈடுபாடில்லாமல் இருத்தல், தலை சுற்றல் ஆகியவை இருக்கும். இதற்கான தீர்வு என்ன? மன அழுத்தம் ஒருவருக்கொருவர் வேறுபடும். சிலர் மன அழுத்தத்தை தவிர்க்க, குடி, புகைபிடிப்பது என திசை மாற்றுவார்கள் அது மிகவும் தவறான முடிவு . சிலர் மன அழுத்தத்தை குறைக்க மாத்திரைகள் சாப்பிடுவார்கள். இதனால் பக்கவிளைவுகள் உண்டாகி வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மன அழுத்த்தை போக்க இன்னும் நிறைய மகிழ்ச்சியான வழிகள் இருக்கிறது. யோகா, இசை,ஸ்பா, மற்றும் ஆயுர்வேத தெரபி என சொல்லிக் கொண்டே போகலாம்.


உங்களுக்கு பிடித்த இசையை தினமும் கேளுங்கள். நீங்கள் விரும்பும் நபரிடம் அடிக்கடி பேசலாம். உங்கள் பள்ளி கல்லூரி வாழ்க்கையில் மகிழ்ச்சியான நினைவுகளை அசைபோட்டால் மனம் லேசாகும். வாரம் ஒருமுறை நீங்கள் வெளியே சென்று பிடித்த உணவு, பிடித்த இயற்கையான சூழ் நிலை என இருந்தால் மன அழுத்தம் இல்லாமால் மகிழ்ச்சியாய் ஓடிக் கொண்டேயிருக்கலாம் உங்கள் பாதையை நோக்கி…

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply