தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளு

Loading...

தொப்பை குறைக்க ஒரு கப் கொள்ளுமருத்துவ குணம்: கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.

அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு.

மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும்.

வயிற்றுப்போக்கு,வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும்.

வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.

கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

1)கொள்ளில் அதிகளவு அயர்ன் மற்ற பருப்புகளை விட அதிகமாக‌ உள்ளது.இதனால் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.

2)இது பல வகையான நோய்களை உடலில் குணப்படுத்துகிறது.

3)இது கொஞ்சம் உடலுக்கு சூடு ஏற்படுத்தும் என்பது உண்மை.

4)இரவு முழுவதும் ஊறவைத்து கொஞ்சம் தண்ணீர் அதிகமாக சேர்த்து ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை மட்டும் எடுத்து அப்படியே வெறும் வயிற்றில் 1 அல்லது 1 1/2 கிளாஸ் குடிங்க.

5)அந்த தண்ணீரிலேயே அந்த கொள்ளை போட்டு நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து,துவையல் மாதிரியும் சாப்பிடலாம்.

6)ஊறவைக்கும் பொழுது ஒரு டீஸ்பூன் சீரகமும் சேர்த்து ஊறவைத்து அந்த நீரை வடித்து லேசாக காய்ச்சி வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

7)ஊறவைத்த கொள்ளை எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம்.மிளகு,சீரகம் சேர்த்த ரசம் மிகவும் நல்லது.

8)காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த நீரை லேசாக சூடு செய்து குடித்தல் மற்ற வழிகளை விட உடல் இளைக்க அதிகம் உதவும்.

9)உடலுக்கு சூடு ஏற்படுத்தும் என்பதால்,முதன் முதலில் கொஞ்சமாக சாப்பிட்டு பார்த்துவிட்டு பிறகு வாரம் ஒரு முறையோ அல்லது உங்கள் வசதிக்கேற்ற மாதிரி தொடரலாம்.

10)என்னதான் இதை சாப்பிட்டாலும் கொஞ்சமாக உடற்பயிற்சியும் தேவை என்பது…எனது உணர்வு பூர்வமான கருத்து.

குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள். சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள்.அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு.உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம்.

சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.

அதை விட ராத்திரி ஒரு ஸ்பூன் கொள்ளு போதும் 1 கிளாஸ் தண்ணீருக்கு. கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் அதை சாப்பிட்டு விடுங்கள்.இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளை ஆட்டி பால் எடுத்து(தண்ணீர்க்குப் பதில்)அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.

(நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும்)இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம்,கொ‌ள்ளு துவைய‌ல்,கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.


பொடியாக்கி வைத்துக்கொள்ள.

துவரம் பருப்பு,2 கப், கொள்ளு 1/2 கப், இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.காய்ந்த மிளகாய்,மிளகு,சீரகம்,நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும். நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் பெருங்காயம்,உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து,காற்றுப் புகாத பாத்திரத்துள் எடுத்துவைக்கவும்.
(பெருங்காயம் கட்டிக் காயமாக இருந்தால் முதலிலேயே சிறிது நெய்யில் பொரித்துக் கொள்ளவும்.)


கொள்ளு கஞ்சி

கொள்ளு மிகவும் சத்தானதும், மருத்துவக்குணம் கொண்டதாகும். வாரம் ஒருமுறை கொள்ளை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. கொள்ளு உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக் கூடியது. எல்லா வயதினரும் இக்கொள்ளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


தேவையான பொருட்கள்:

கொள்ளு, அரிசி – 200 கிராம், சின்னவெங்காயம் -100 கிராம், துருவிய தேங்காய் – ஒரு கரண்டி, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், பச்சைமிளகாய் – 2, கருவேப்பிலை தேவைக்கேற்ப‌
செய்முறை:
கொள்ளை லேசாக வறுக்கவும், அதை மிக்சியில் ஒரு சுற்று உடைத்து எடுக்கவும். பின்னர் அதைச் சுத்தம் செய்து அரிசியுடன் சேர்த்து கழுவிவிடவும். குக்கரில் போட்டு ஐந்து மடங்கு நீர் விட்டு அத்துடன், சின்ன வெங்காயத்தை உரித்து சின்ன துண்டுகளாக நறுக்கிப் போட்டு துருவிய தேங்காயை சேர்த்து, தேவையான அளவு, உப்புச் சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு பொறித்ததும் பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதங்கியவுடன் கொள்ளுக் கஞ்சியில் சேர்த்து நன்கு கலக்கி காலை டிபனாக சாப்பிட சுவையாக இருக்கும். வாரம் ஒரு முறை இவ்வாறு சாப்பிடுவது நல்லது.


கொள்ளு தொக்கு

தேவையான பொருட்கள்:
கொள்ளு – 100 கிராம், சின்ன வெங்காயம் – 4, பச்சைமிளகாய் – 2, சமையல் எண்ணெய்- ஒரு ஸ்பூன், கடுகு + உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை & ஒரு இணுக்கு, உப்பு – தேவையான அளவு.


செய்முறை:

கொள்ளை முதல் நாள் காலையில் நீரில் ஊறவைத்து, அன்று மாலை கழுவி சுத்தம் செய்து நீர் இல்லாமல் வடித்து ஒரு துணியில் கட்டி வைத்துவிட்டால் மறுநாள் காலையில் முளைவிட்டிருக்கும் அந்தக் கொள்ளை நீர்விட்டு நன்கு வேகவைத்து மசித்து வைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு + உளுத்தம்பருப்பு போட்டு வெடித்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலைப் போட்டு நன்கு வதக்கி மசித்த தொக்குவில் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கிளறி சாதத்தில் போட்டு, சிறிதளவு நல்ல எண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.


கொள்ளு துவையல்

கொள்ளு – 100 கிராம், மிளகாய் வத்தல் – 4, புளி – நெல்லிக்காய் அளவு, பூண்டு- 2 பல், தேவையான அளவு உப்பு.
கொள்ளை நன்றாக வறுத்து அத்துடன் மிளகாய் வத்தல், புளி, பூண்டு, உப்புச் சேர்த்து நன்கு அரைத்து துவைலாக சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply