தேவையில்லாத மென்பொருளை நீக்க (Software Removal Tool) கூகுள் தரும் புதிய வசதி

Loading...

தேவையில்லாத மென்பொருளை நீக்க (Software Removal Tool) கூகுள் தரும் புதிய வசதிதேவை இல்லாமல், நம் கம்ப்யூட்டர்களில் இறங்கும் சாப்ட்வேர் தொகுப்புகள், திருட்டுத்தனமாகத் தகவல்களைத் திருடும் வகையில் நுழையும் ஸ்பைவேர் தொகுப்புகள் ஆகியவற்றை நீக்குவதற்கென, கூகுள் ஒரு புதிய டூல் ஒன்றைத் தருகிறது.

இது தேவை இல்லாமல், தாமாக வந்து ஒட்டிக் கொள்ளும் டூல்பார்களை, (எடுத்துக் காட்டாக Ask Toolbar) உடனடியாக நீக்குகிறது. இதனை இலவசமாகப் பெற்று பயன்படுத்த https://www.google.com/chrome/srt/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

இதனை இயக்கும்போது, நீக்குவதற்கான மோசமான புரோகிராம்கள் எதுவும் இல்லை என்றாலும், நம்முடைய செட்டிங்ஸ் அனைத்தையும் இது மாற்றி அமைக்கும்.

இது நம்முடைய விருப்பத்தின் பேரில் தான் நடைபெறும். குரோம் பிரவுசர் பயன்படுத்துவோர், அதில் ஏதேனும் பிரச்னைகள் தென்பட்டால், இதனைப் பயன்படுத்தலாம்.

வேறு ஏதேனும் புரோகிராம்கள், குரோம் பிரவுசரை அனுமதியின்றி பயன்படுத்தினால், அந்த புரோகிராம்கள் அனைத்தும் நீக்கப்படும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply