தூக்கத்தில் உளறுவது ஏன்

Loading...

தூக்கத்தில் உளறுவது ஏன்இரவில் தூங்கும் போது சிலர் தன்னை அறியாமல் பேசுவதை கேட்டிருப்பீர்கள். இதனை தூக்கத்தில் உளறுதல் என்பர். இவை ஏன் ஏற்படுகிறது என்று தெரியுமா? தூக்கத்திற்கான கட்டுப்பாட்டு மையம் மூளையின் முகுளப் பகுதி தான்.

இருப்பினும் தாலமஸ், நடுமூளையின் வலைப்பின்னல் அமைப்பு மூளை தண்டுப்பகுதி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் தூக்கத்தின் தன்மை சில சமயங்களில் மாறுபடுகிறது.

பொதுவாக ஆழ்ந்து தூங்கும் நிலை குழந்தைப் பருவங்களில் அதிக அளவுகளில் ஏற்படுகிறது. இந்த ஆழ்ந்த தூக்கத்தின் இறுதிக்கட்டத்தில், உணர்வு நரம்புகளின் தூண்டுதலால் தானாகப் பேசுவதும், புலம்புவதும் ஏற்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply