திருடப்பட்ட 50 இலட்சம் ஜிமெயில் கணக்குகள்! பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுமாறும் கோரிக்கை

Loading...

திருடப்பட்ட 50 இலட்சம் ஜிமெயில் கணக்குகள்! பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுமாறும் கோரிக்கைரஷ்யாவை சேர்ந்த ஹாக்கிங் நிறுவனம் ஒன்று தங்கள் இணையதளத்தில் 50 லட்சம் ஜிமெயில் முகவரிகளையும், பாஸ்வேர்டுகளையும் வெளியிட்டுள்ளது.

இதனை பிஷ்ஷிங் தொழில்நுட்பம் எனப்படும் போலியான இணையதள வடிவமைப்பை பயன்படுத்தி இந்த தகவல்களை திருடியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டேனிஷ் பாதுகாப்பு அமைப்பான CSIS.

இதில் இடம் பெற்றிருக்கும் பெரும்பாலான முகவரிகள் (அதிகப்படியான டேட்டாக்கள் நிறைந்ததால்) உபயோகப்படுத்தாமல் இருப்பவை என்று கூறியுள்ளனர்.

இதுபோன்ற காரணங்கள் நடக்கலாம் என்பதால் தான் கூகுள் தனது பரிந்துரைகளில் அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளும்படி கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி ஜிமெயில் பயன்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கூகுள் இது போன்ற சம்பவம் ஏதும் நடைபெற்றதாக தகவல்கள் இல்லை. இருந்தாலும் உங்கள் கணக்கின் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்ற வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply