தித்திக்கும் தினை பணியாரம்

Loading...

தித்திக்கும் தினை பணியாரம்
தேவையான பொருட்கள்:
தினை – 1/2 கப் அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் வெல்லம் – 4 1/2 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா – 1 சிட்டிகை உப்பு – 1 சிட்டிகை தண்ணீர் – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெல்லத்தை 1/4 கப் நீரில் போட்டு அடுப்பில் வைத்து பாகு போன்று செய்து கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு தினையை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரை முற்றிலும் வடித்து, ஊறிய தினையை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மாவானது ஓரளவு கெட்டியாக இருக்க வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் அரிசி மாவு, தேங்காய், வெல்லப் பாகு, உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து, 3 மணிநேரம் ஊற வைத்து, பின் அதில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அடுத்து பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். கல்லானது சூடானதும், குழிகளில் எண்ணெய் தடவி, பின் மாவை ஊற்றி, மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் ஒரு கம்பியால் அதனை திருப்பிப் போட்டு, மீண்டும் 3 நிமிடம் வேக வைத்து இறக்கினால், தித்திக்கும் தினை பணியாரம் ரெடி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply