தால் சூப்

Loading...

தால் சூப்
தேவையான பொருள்கள்:

மைசூர் பருப்பு – 1/2 கப்
வெண்ணெய் – 1/2 டீ ஸ்பூன்
வெங்காயம் நறுக்கியது – 1 டீ ஸ்பூன்
பூண்டு – 2 பல்
தக்காளி சிறியது – 2
மல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

* முதலில் வெண்ணெயைச் சூடாக்கி அதில் பூண்டு, வெங்காயத்தை வதக்கவும்.

* இரண்டு நிமிடம் கழித்து இத்துடன் பருப்பு, முழுத்தக்காளி உப்பு மூன்றையும் சேர்த்து வேக விடவும்.

* குக்கரில் ஒரு விசில் வந்தவுடன் ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து வேக விடவும்.

* பிறகு வெந்த தக்காளியின் மேல் தோலை நீக்கி விட்டு மிக்ஸியில் ஸ்மூத்தாக அரைத்து பருப்புக் கலவையுடன் சேர்த்து மல்லி இலையை தூவிப் பரிமாறவும்!

* காரம் தேவை என்றால் மிளகுத் தூள் சேர்த்துச் சாப்பிடலாம்.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN