தானிய இனிப்பு புட்டு

Loading...

தானிய இனிப்பு புட்டு
தேவையானவை:
பச்சரிசி மாவு – அரை கப், கடலைப்பருப்பு, பச்சைப்பயறு, சோளம், – தலா கால் கப், கோதுமை மாவு – கால் கப், தேங்காய்த் துருவல் – ஒரு கப், நாட்டுச் சர்க்கரை – ஒரு கப், முந்திரி – 8 (நெய்யில் வறுக்கவும்), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, நெய், உப்பு – சிறிதளவு.

செய்முறை:
கடாயில் கோதுமை மாவை சிவக்க வறுத்து வைக்கவும் தானிய வகை களை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் தனித்தனியாக பொடித்துக்கொள்ளவும். இவற்றுடன் அரிசி மாவு சேர்த்து வெதுவெதுப்பான உப்பு நீர் தெளித்துப் பிசறி 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பிறகு, இதனை இட்லித்தட்டில் வைத்து 10 நிமிடம் ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். வெந்த மாவுடன் தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறி… வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply