டுவிட்டர் தளம் ஹக்! 2,50000 பயனாளிகளின் தகவல்கள் திருட்டு

Loading...

டுவிட்டர் தளம் ஹக்! 2,50,000 பயனாளிகளின் தகவல்கள் திருட்டுட்விட்டர் தளம் ‘ஹேக்’ செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 2,50,000 பயனாளிகளைப் பற்றிய தகவல் திருடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வார தொடக்கத்திலேயே ஹேக்கர்கள், ட்விட்டர் பயனாளிகளின் தகவல்களை திருட முயற்சி மேற்கொள்ளப்பட்டதை கண்டறிந்ததும்,உடனே குறிப்பிட்ட ‘பிளாக்’ ( Blog) ஒன்றை மூடியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் ஹேக்கர்கள், சுமார் 250,000 பயனாளிகளின் யூசர் நேம் ( user name), இமெயில் முகவரிகள் மற்றும் பாஸ்வேர்ட்கள் ஆகியவற்றை திருடியிருக்கலாம் என்றும், எனவே புதிய பாஸ்வேர்டுகளை உருவாக்கிக் கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தி தாங்கள் இ மெயில் அனுப்பி உள்ளதாகவும் ட்விட்டர் தள நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஹேக்கர்கள் சாமான்யர்கள் அல்ல என்றும், நன்கு திறமை பெற்ற நவீன தொழில் நுட்ப அறிவு கொண்ட குழுவினராக இருக்கலாம் என்றும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply