ஞாபக சக்தியை அதிகரிக்க வேணுமா அப்ப இதை கட்டாயம் படிங்க

Loading...

ஞாபக சக்தியை அதிகரிக்க வேணுமா அப்ப இதை கட்டாயம் படிங்கஒருவரைப் பெரிதும் களைப்படையவும்,சோர்வடையவும் செய்வது அதிக உழைப்பு என்று பலரும் சொல்வதெல்லாம் தப்பு. இந்த டயர்டுக்குக் காரணம் குறைவான உழைப்பே என்பதுதான் உண்மை. இரவு நேரத்தில் குறிப்பாக அதிகாலை 2 மணிக்கும் 4 மணிக்கும் இடையில் மனிதனின் நினைவாற்றல் மிகவும் பலவீனமாக உள்ளது. அவனது இயக்கங்களும் மிகவும் மந்தமடைகின்றன.

அந்த நேரத்தில் கணிதப் பணியில் அவன் ஈடுபட்டால் பல தவறுகள் நேரக்கூடும்.அதேபோன்று பகலிலும் மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை பலவீனமான நேரம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.காலை 8 மணியில் இருந்து 12 மணி வரையும்,மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணி வரையும் மனிதனின் திறமைகள் மிக உயர்ந்த நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மூளை உழைப்பின் தீவிரமும் வேலை நேரத்தில் மாற்றமடையக் கூடும்.

இந்த மூளையானது மனித உடலின் மொத்த எடையில் 2.5 சதவீதம்தான் என்றாலும், அது மனிதனின் சக்தி மூலத்தில் 20 சதவீதத்தைப் பயன்படுத்துகிறது. ஆகவே நாம் நமது ஞாபக சக்தியையும், மூளைத்திறனையும் பெருக்க மூளையை சரிவரக் கவனித்து, அதற்கு போதுமான போஷாக்கை அளிக்க வேண்டும்.சிலருக்கு சிலவேளைகளில் மூளைக்கு மருந்து கொடுப்பதும் அவசியமாகலாம். அதிலும் மூளைத்தளர்ச்சி என்ற நாள்பட்ட நோய் பாதிப்புக்கு மருந்து கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. குளூக்கோஸ், மூளைக்கு முக்கியமாக போஷாக்கு அளிக்கும். மூளை களைப்பு அடைவதைத் தடுக்க சில அமினோ அமிலங்களும் அவசியம்.

Loading...
Rates : 0
MGID
Loading...
VTST BN