ஜுன் மாதத்தில் அறிமுகமாகின்றது LG G3

Loading...

ஜுன் மாதத்தில் அறிமுகமாகின்றது LG G3LG நிறுவனத்தின் புதிய தயாரிப்பான G3 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகிய வண்ணம் இருந்தன.

இந்நிலையில் இக்கைப்பேசி எதிர்வரும் ஜுன் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இக்கைப்பேசியானது 5.5 அங்குல அளவுடையதும், 2560 x 1440 Pixel Resolution உடையதுமான பெரிய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 2.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor இனையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும் இதில் 16 மெகாபிக்சல்களை உடைய அதி துல்லியம் வாய்ந்த கமெராவும் இணைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இக்கைப்பேசியின் விலை மற்றும் ஏனைய தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply