ஜல்ஜீரா

Loading...

ஜல்ஜீரா
தேவையான பொருட்கள்:
குளிர்ந்த தண்ணீர் – 3 1/2 கப் புதினா – 1/4 கப் கொத்தமல்லி – 1/4 கப் இஞ்சி – 1 துண்டு எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் புளி – 1 டேபிள் ஸ்பூன் காரா பூந்தி – சிறிது சர்க்கரை – 1 டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு மாங்காய் தூள் – 1/4 டீஸ்பூன் சாட் மசாலா – 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் புளியை சிறிது நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் மசாலா பொடிகள் மற்றும் எலுமிச்சை சாற்றினைத் தவிர அனைத்தையும் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சிறிது தண்ணீர் தெளித்து, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டியில் போட்டு, குளிர்ந்த நீர் ஊற்றி நன்கு வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்பு அதில் மசாலா பொருட்களை அனைத்தையும் போட்டு, அத்துடன் சர்ச்சரை மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பரிமாறினால், ஜல்ஜீரா பானம் ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply