சோபாவில் படுத்து தூங்குவதால் வரும் விளைவுகள்

Loading...

சோபாவில் படுத்து தூங்குவதால் வரும் விளைவுகள்என்னதான் பெட்ரூமில் உள்ள கட்டிலில் படுத்து நன்றாக தூங்கினாலும், வீட்டின் வரவேற்பரையில் இருக்கும் சோபாவில் படுத்து தூங்குவது என்பது சுகமான ஒன்றுதான்.வெளியில், எங்காவது சென்றுவிட்டு களைப்பாக வீடு திரும்பும் போது, நம் கண்ணில் உடனே தென்படுவது வரவேற்பரையில் இருக்கும் சோபாதான்.

உடனே, அதில் விழுந்து படுப்போம், கூடவே தொலைக்காட்சியையும் பார்த்துக்கொண்டு படுத்திருக்க சொல்லும் மனது.

ஆனால், குழந்தைகள் தூங்கக் கூடாத ஓர் அபாய இடம் என்கிறது ஆய்வு.

குழந்தைகளின் இறப்பு விகிதத்தை வைத்து நடந்த ஓர் ஆய்வின் முடிவில்தான் சராசரியாக 8 குழந்தைகளில் ஒருவரின் மரணத்துக்கு சோபாவில் தூங்குவது காரணம் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தூக்கம் தொடர்பான 9 ஆயிரத்து 73 குழந்தை மரணங்களில், ஆயிரத்து 24 குழந்தைகள் சோபாவில் தூங்கியபோது உயிர் இழந்திருக்கிறார்கள்.

இதில் 3 வயது வரை உள்ள குழந்தைகளின் மரணம் மிகவும் அதிகம். கீழே தவறி விழுவது, பெரியவர்கள் நெருக்கமாக அணைத்துக்கொண்டு தூங்கும்போது ஏற்படும் மூச்சுத்திணறல் ஆகியவை முக்கியக்காரணங்களாகக் கூறப்பட்டிருக்கின்றன.

இந்த அபாயங்களைத்தவிர்க்க குப்புறப்படுத்து உறங்கப் பழக்குவது, தொட்டில் பயன்படுத்துவது, குழந்தைகளை அவர்களுக்கான இடத்தில் தூங்க வைப்பது போன்ற வழிமுறைகளைக்கையாளவும் இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply