செவ்வாய் கிரகத்தை சுற்றும் இயற்கை கோள்கள் படம் அனுப்பிய மங்கள்யான்

Loading...

செவ்வாய் கிரகத்தை சுற்றும் இயற்கை கோள்கள் படம் அனுப்பிய மங்கள்யான்செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சிக்காக மங்கள்யான் விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஆண்டு விண்ணில் செலுத்தியது. செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதைக்குள் மங்கள்யான் நுழைந்து 2 வாரங்களை கடந்த நிலையில், தொடர்ந்து படங்களை அனுப்பி வருகிறது.

அதன்படி, செவ்வாயை சுற்றிவரும் 2 இயற்கைக்கோள்களின் படங்களை மங்கள்யான் அனுப்பி உள்ளது. செவ்வாய் கிரகத்திலிருந்து சுமார் 66.275 கி.மீ. உயரத்திலிருந்து இந்த புகைப்படங்களை மங்கள்யான் எடுத்துள்ளது.

அந்த இயற்கை கோள்கள் பூபஸ் மற்றும் டெய்மஸ் என்று அழைக்கப்படுகிறது. அந்த இரண்டு நிலவுகள் 1877-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இயற்கை கோள்களில் பூபஸ், டெய்மசைவிட 7 மடங்கு பெரியது என கருதப்படுகிறது.

மங்கள்யான் எடுத்து அனுப்பிய படங்களில் ஒன்றை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வமான பேஸ்புக் பக்கத்தில், செவ்வாயை சுற்றும் நிலவுகளில் பெரிதான இந்த பூபஸ் மேற்கில் இருந்து, கிழக்கு நோக்கி சுற்றி வருகிறது என்ற வாசகத்துடன், பகிர்ந்துள்ளனர்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply