செவ்வாய் கிரகத்தில் டிராபிக் சிக்னல்

Loading...

செவ்வாய் கிரகத்தில் டிராபிக் சிக்னல்செவ்வாயில் எலியன்ஸ்கள் சாலையை கடக்க டிராபிக் சிக்னல் பயன்படுத்துகிறார்களா? ஒரு வேடிக்கையான கேள்வியுடன் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ அனுப்பிய ‘கியூரியாசிட்டி’ ரோவர் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எடுத்த புகைப்படத்தில் டிராபிக் சிக்னல் இருப்பது போன்று தெரியவந்துள்ளது.

“டிராபிக் சிக்னல்” தொடர்பான புகைப்படத்தை பிரிட்டன் யு.எப்.ஓ. ஆர்வலர் ஜோசப் ஒயிட் என்பவர் பார்த்ததாக பதிவு செய்துள்ளார். நாசாவின் கியூரியாசிட்டி விண்கலமானது தற்போது செவ்வாயின் மேற்பரைப்பை ஆராய்வதிலும், புகைப்படம் எடுப்பதிலும் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளது.

“விண்கலம் சென்றதை அடுத்து நாசா வெளியிடும் புகைப்படங்களை நான் தொடர்ந்து பின்பற்றி வருகின்றேன். நாசாவின் இணையதளத்தை தொடர்ந்து பார்த்து வருகின்றேன். அப்போது விசித்திரமான இந்த புகைப்படத்தை பார்த்தேன்.” என்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ஜோசப் ஒயிட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாசாவின் பதிலுக்காக காத்திருக்கிறோம். என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது மற்றொரு பாறையாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply