செல்ஃபி போனும் செல்ஃபி பிரெஷும்

Loading...

செல்ஃபி போனும் செல்ஃபி பிரெஷும்எதிர்பார்த்தபடியே மைக்ரோசாப்ட் லூமியா 830 உள்ளிட்ட புதிய ஸ்மார்ட் போன்களை பெர்லின் தொழில்நுட்பக் கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. லூமியா 735 செல்ஃபிகளுக்கு ஏற்றது. அதற்கேற்ற 5 மெகா பிக்சல் காமிரா மற்றும் வைடு ஆங்கிள் தன்மை கொண்டுள்ளது.

இந்த போனில் நவீன பிளாஷ் உத்தியும் உள்ளது. அதாவது இந்த போனில் குறைந்த ஒளியில் படம் எடுக்கும் போது, பிளாஷ் ஒளியுடன் ஒரு படம், அடுத்ததாக பிளாஷ் இல்லாமல் ஒரு படம் என இரண்டு படங்கள் எடுக்கப்படும். பின்னர் இவை இணைந்து சிறந்த தோற்றம் கொண்ட படம் உருவாகும். லூமியா டெனிம் எனும் சாப்ட்வேர் இதைச் சாத்தியமாக்குகிறது. மற்ற லூமியா போன்களிலும் இது அப்டேட் செய்யப்படலாம்.

லூமியா 830 போன் 3 ஜி, 4 ஜி வசதி கொண்டது. இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகமாக உள்ள இதன் விலை சுமார் ரூ. 26,000 இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

செல்ஃபி மோகத்தின் இன்னொரு வெளிப்பாடாக செல்ஃபி பிரெஷ் அமெரிக்காவில் அறிமுகமாகி உள்ளது. செல்ஃபி எடுத்துக்கொள்வதற்கு முன் தலைமுடி கலைந்திருந்தால் நன்றாகவா இருக்கும்? ஆனால் தலையை வார சீப்பைத் தேடிக்கொண்டிருந்தால் கச்சிதமான டைமிங் மிஸ் ஆகிவிடலாம்.

அதைத் தவிர்க்கத்தான், செல்ஃபி பிரெஷ் வந்திருக்கிறது. இதில் தலையை வாரிக்கொண்டு அப்படியே செல்ஃபியும் எடுத்துக்கொள்ளலாம். உண்மையில் இந்த பிரெஷ் , ஐபோனுக்கான கேஸ் போன்றது. அதில் பிரெஷும் இணைந்திருக்கிறது. முன்பக்கத்தில் போனும் இருக்கிறது. எப்படி?

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply